தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கிணற்றை காணோம் என்றதைப் போல, ரயில் கம்பார்ட்மென்டேயே காணவில்லை..! ஒடிசாவில் நடந்தது என்ன..? - specific coach Passengers

பூரி மாவட்டத்தின் பிபிலி ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்து டிக்கெட் உறுதியான நிலையில், அந்த கம்பாட்மெண்டே இல்லாதது ரயில் பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரயில் டிக்கெட் இருக்கு ஆனால் கம்பாட்மண்டை காணவில்லை
ரயில் டிக்கெட் இருக்கு ஆனால் கம்பாட்மண்டை காணவில்லை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 7, 2024, 7:45 AM IST

ஒடிசா: இந்தியாவின் போக்குவரத்துறையில் ரயில்வே துறை முக்கிய பங்கு வகித்து வருகிறது. பொதுமக்களின் தேவைக்கேற்ப அவ்வப்போது, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர்த்து, ரயில்வே துறையின் வளர்ச்சியை அதிகரிக்க அவ்வப்போது புதுப்புதுத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பூரி மாவட்டத்தின் பிபிலி ரயில் நிலையத்தில் கிணற்றை காணவில்லை என ஒரு திரைப்படத்தில் வரும் வடிவேலுவின் நகைச்சுவைப் போல டிக்கெட் உறுதியான நிலையில், அந்த ரயில் கம்பார்ட்மென்ட் இல்லாதது பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குர்தா ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு வரை ரயில் மார்க்கமாக செல்வதற்காக கஜலட்சுமி யூத் கிளப் அசோசியேஷன் கமிட்டியைச் சேர்ந்த 38 பேர் முன்பதிவு செய்துள்ளனர். பெங்களூர் செல்வதற்காக முன்னதாகவே ரயில் நிலையம் சென்ற கமிட்டியினர், அவர்களின் இருக்கை தேடிச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு சென்று தேடிப்பார்த்ததில் அவர்களின் முன்பதிவு இருக்கைப் பெட்டியே இல்லாமல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையும் படிங்க:நாட்டின் முக்கிய அருங்காட்சியகங்களுக்கு இ-மெயிலில் போலி வெடிகுண்டு மிரட்டல்!

இது குறித்து பாதிக்கப்பட்ட அசோக் குமார் அகர்வால் என்பவர் கூறுகையில், முன்பதிவு செய்த இருக்கைகளின் பெட்டியே இல்லாமல் போனது அதிர்ச்சி அளித்தது. அதிகாரிகள் பொறுப்பில்லாமல் இப்படியான வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்" என்று காட்டம் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பயணிகள் இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் புகார் அளித்த நிலையில், அவர்களுக்கென்று விசாகப்பட்டினத்தில் புதிதாக ஒரு கம்பார்ட்மென்ட் அமைத்து தரப்படும் என எழுத்துப்பூர்வமாக ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்தனர். மேலும், இந்த அசாதாரண சூழலுக்கு ரயில்வே துறை சார்பில் பயனாளிகளிடம் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:"ஓங்கோலில் வந்தவர்களெல்லாம் தமிழர் என்றால் மோடியும் தமிழர் தான்" - அண்ணாமலை ஆவேசம்!

ABOUT THE AUTHOR

...view details