கன்ஜம் மாவட்ட ஆட்சியர் விஜய் அம்ருதா மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டபோது தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த அந்த நபரைக் கண்டுள்ளார்.
அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்த படுக்கையில் தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை வைத்து படித்துக்கொண்டிருந்ததைக் கண்ட ஆட்சியர் அது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
கரோனா தொற்றிலும் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த நபர் அதில், வெற்றி தற்செயலான நிகழ்வு அல்ல; உங்களுக்கு அர்ப்பணிப்புத் தேவை. கரோனா மருத்துவமனைக்கு நான் சென்றிருந்தபோது இந்த நபர் சிஏ தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருப்பதைக் கண்டேன்.
உங்களின் அர்ப்பணிப்பு உங்களுடைய வலியை மறக்கச்செய்கிறது. அதன்பிறகு வரும் வெற்றி ஒரு சம்பிரதாயம்தான் எனக் குறிப்பிட்டிருந்தார். அந்தப் பதிவுடன் தேர்வுக்காகப் படித்துக்கொண்டிருந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டார்.
இதையும் படிங்க:18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான பதிவு தொடக்கம்!