ஒடிசா மாநிலம் கேந்த்ரபாரா மாவட்டம் பிரஹராஜ்பூர் பகுதியைச் சேர்ந்த பாபுலா சிங் என்பவர் தெரு நாயை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
'ஈவு இரக்கமின்றி நாயை கொலை செய்த நபர்' - வைரல் வீடியோ - dog murder viral video
புவனேஷ்வர்: பழி தீர்க்கும் பொருட்டு தெரு நாயை கொஞ்சமும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்த நபர் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதை தொடர்ந்து பட்டமுண்டாய் பகுதியைச் சேர்ந்த ஃபிர்தோஷ் என்பவர் இந்த கொடூர செயலை கண்டித்ததற்கு அவரையும் நாயை கொன்றதை போலவே கொலை செய்து விடுவேன் என்று எச்சரித்துள்ளார்.
இதையடுத்து இது தொடர்பாக, ஃபிர்தோஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து அவர் விலங்குகள் கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தனது 2 கோழியை கொன்றதால் நாயை தான் கொலை செய்ததாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.