தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.,க்கு உளவு பார்த்தவருக்கு ஆயுள் தண்டனை! - Odisha man awarded life imprisonment

புவனேஷ்வர்: பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு ஆதரவாக செயல்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் முன்னாள் ஒப்பந்த கேமராமேனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

life imprisonment for ISI links
ஆயுள் தண்டனை

By

Published : Feb 11, 2021, 10:20 PM IST

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை தளத்தில் (ஐ.டி.ஆர்) ஒப்பந்த கேமராமேனாகப் பணியாற்றியவர், ஈஸ்வர் பெஹாரா. இவர் பாகிஸ்தானின் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,க்கு ஒருங்கிணைந்த சோதனை தளத்தின் ரகசிய தகவல்களை அனுப்பியதற்காக கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக, ஒடிசா காவல் துறையினர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “பாகிஸ்தானின் உளவு அமைப்பிற்கு ஆதரவாக செயல்பட்ட ஈஸ்வர் பெஹாராவின் வழக்கு பாலசோர் மாவட்ட கூடுதல் நீதிபதியின் அமர்வின் கீழ் விசாரணைக்கு வந்தது. உளவாளியாக இருந்த குற்றத்திற்காக ஈஸ்வருக்கு ஆயுள் தண்டை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என்றிருந்தது.

மயூர்பஞ்ச் மாவட்டத்தில் பைசிங்காவிற்கு அருகே கான்டிபூர் கிராமத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2007ஆம் ஆண்டில் ஐ.டி.ஆர் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் கேமராமேனாக பணியில் சேர்ந்துள்ளார். கிட்டத்தட்ட சந்தேகத்திற்கு இடமின்றி 8 முதல் 10 மாதங்களாக ஐ.எஸ்.ஐக்காக உளவு பார்த்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தவர் ராஜஸ்தானில் கைது!

ABOUT THE AUTHOR

...view details