தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிசாவில் 15 நாள்களுக்கு முழு ஊரடங்கு

புவனேஸ்வர்: ஒடிசாவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த, 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Odisha
ஒடிசா

By

Published : May 2, 2021, 12:21 PM IST

ஒடிசா மாநிலத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், ஒடிசாவில் கரோனா பரவலைத் தடுத்திட அடுத்த 14 நாள்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 5 முதல் மே 16 வரை அமலுக்கு வரும் ஊரடங்கு உத்தரவில், கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

காலை 7 மணி முதல் 12 மணி வரை, மக்கள் 500 மீட்டர் தொலைவிற்குள் உள்ள கடைகளில் காய்கறிகள் வாங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார சேவைக்கும், அவசர கால தேவைக்கும் எவ்வித கட்டுபாடுகளும் விதிக்கப்படவில்லை.

ABOUT THE AUTHOR

...view details