தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாக்சின் செலுத்திக் கொண்ட நவீன் பட்நாயக்! - கரோனா தடுப்பூசி

புவனேஷ்வர்: பிரதமர் மோடியை தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது.

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

By

Published : Mar 1, 2021, 4:30 PM IST

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இன்று முதல் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை தொடர்ந்து ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்குக்கு கோவாக்சின் தடுப்பூசி இன்று செலுத்தப்பட்டது.

மாநிலம் முழுவதும் மூன்றாம் கட்ட தடுப்பூசி விநியோகப் பணி தொடங்கியுள்ளதன் மூலம், பிற நோய்களால் பாதிப்படைந்துள்ள 45 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 74 வயதான நவீன் பட்நாயக்குக்கு சட்டப்பேரவை மருந்தகத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், "நான் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதை உங்களிடம் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சரியான நேரத்தில் மக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட முக்கிய பங்காற்றிய விஞ்ஞானிகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு நன்றி. இலவசமான கரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ள தகுதி வாய்ந்த அனைவரும் முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details