ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், கட்டாக், பெர்ஹாம்பூர் மாநகராட்சிகள் உள்பட 109 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி 3,068 சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மூன்று மாநகராட்சிகளில் 168 வார்டுகளுக்கு 1,407 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது - ஒடிசா நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்
ஒடிசா மாநில நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
அதேபோல நகராட்சி, பேரூராட்சிகளில் 1,731 வார்டுகளுக்கு 3,068 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 40.55 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 6,411 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவுக்காக 22,000 பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே மாநிலம் முழுவதும் தேர்தலை முன்னிட்டு 24,663 லிட்டர் மதுபானம், 3.4 கிலோ போதைப்பொருள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதையும் படிங்க:பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நடத்தக்கூடாது - சென்னை உயர் நீதிமன்றம்