ஒடிஷா: இங்கிலாந்தின் இரண்டாம் எலிசபெத் மகாராணி காலமானதையடுத்து, ஆட்சிப் பொறுப்பு அவரது மகன் சார்லஸிடம் வந்துள்ளது. எலிசபெத் மகாராணி அணிந்து வந்த, கோஹினூர் வைரம் பதித்த கிரீடம், சார்லஸின் மனைவி கமிலாவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கோஹினூர் வைரம் இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்டது என்பதால், கடந்த சில நாட்களாக இந்தியர்கள் பலர் கோஹினூர் வைரத்தை மீட்டுக்கொண்டு வர வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஒடிஷா மாநிலம் பூரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஸ்ரீ ஜெகன்நாத் சேனா அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரியதர்ஷன் பட்நாயக், கோஹினூர் வைரம் பூரி ஜெகன்நாத் கோயிலுக்குச் சொந்தமானது எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக குடியரசுத் தலைவருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கோஹினூர் வைரம் ஸ்ரீ ஜெகன்நாத பகவானுக்கு சொந்தமானது. அது, இப்போது இங்கிலாந்தில் அரச குடும்பத்திடம் உள்ளது. பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானின் நாதிர் ஷாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றபோது, கோஹினூர் வைரத்தை பூரி ஜெகன்நாத் கோயிலுக்கு நன்கொடையாக அளித்தார்.