தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பு - முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பை காணலாம்.

News today
News today

By

Published : Oct 30, 2021, 7:35 AM IST

புனித் ராஜ்குமாரின் உடலுக்கு அஞ்சலி

புனித் ராஜ்குமார்

மாரடைப்பு காரணமாக நேற்று (அக்.29) உயிரிழந்த கன்னட பவர் ஸ்டாரான புனித் ராஜ்குமாரின் உடல், பெங்களூருவில் கன்டீரவா ஸ்டூடியோவில் இன்று (அக்.30) பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

தேவர் ஜெயந்தி விழா

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 114 ஆவது ஜெயந்தி விழாவையொட்டி, அவரது முழு உருவச் சிலைக்கு இன்று (அக்.30) முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

பள்ளிகளுக்கு விடுமுறை

மழை

தமிழ்நாட்டில் பெய்துவரும் கனமழை காரணமாகத் திருவாரூர், திருநெல்வேலி, மயிலாடுதுறை, நாகை, திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று (அக்.30) விடுமுறை அளித்து ஏழு மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மெகா தடுப்பூசி முகாம்

மெகா தடுப்பூசி முகாம்

தமிழ்நாட்டில் ஏழாவது கட்டமாக 50 ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று (அக்.30) நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது.

13 மாநிலங்களில் தேர்தல்

தேர்தல்

நாட்டின் 13 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசத்தில் காலியாக இருக்கும் 3 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று (அக்.30) இடைத்தேர்தல் நடை பெறுகிறது.

ஜி20 மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

மோடி

இத்தாலியின் ரோம் நகரின் தொடங்கும் ஜி 20 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி இன்று (அக்.30) உரை நிகழ்த்துகிறார். கரோனா பேரிடருக்கு பிறகு இருக்கும் பொருளாதார மீட்சி வளர்ச்சி உள்ளிட்ட முக்கிய பிரச்சினை குறித்து உரையாற்றுகிறார்.

ABOUT THE AUTHOR

...view details