தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாஜக-அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடர்கிறது: ரங்கசாமி - என்.ஆர். காங்கிரஸ்

புதுச்சேரி: பாஜக-அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்கிறது என்று அக்கட்சித் தலைவர் ரங்கசாமி உறுதிப்படுத்தியுள்ளார்.

என் ஆர்
என் ஆர்

By

Published : Nov 27, 2020, 11:55 AM IST

புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் ரெட்டியார் பாளையத்தில் இயங்கிவந்தது . அதற்கு பதிலாக மாற்று இடத்தில் தற்போது என்.ஆர். காங்கிரஸ் தலைமை அலுவலகம் கிழக்கு கடற்கரை சாலையில் தொடங்கப்பட்டது. இதனை அக்கட்சித் தலைவர் ரங்கசாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

பின்னர் என்.ஆர் காங்கிரஸ் அலுவலகம் திறப்பு விழாவில் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிறத்திலான மூன்று குதிரைகளின் நெற்றியில் குங்குமம் வைத்து அவர் பூஜை செய்தார்.


தொடர்ந்து புதுச்சேரியில் அதிமுக,பாஜக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், எங்கள் கூட்டணியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது ஏற்கனவே இருந்த கூட்டணியில்தான் இன்னும் இருக்கிறோம். லோக்சபா தேர்தல் இடைத்தேர்தல்களில் இருந்த அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் பழைய கூட்டணி தொடர்கிறது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details