டெல்லி: முகலாயர் காலத்து புகழ்பெற்ற தொன்மையான மசூதியான ஜமா மசூதியின் வாயிலில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது. அதில், 'ஜமா மசூதிக்குள் பெண்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ நுழைவதற்குத் தடை விதிக்கப்படுகிறது' என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இஸ்லாமியப் பெண்கள் மத்தியில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
டெல்லி ஜமா மசூதியில் பெண்கள் நுழையத் தடை - Delhi jama masjid
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற மசூதியில் பெண்கள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
டெல்லி மசூதியில் பெண்கள் நுழைய தடை
இருப்பினும், ஜமா மசூதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகை எப்போதும்போல காணப்படுகிறது. அதேநேரம் இந்த நோட்டீஸ் தொடர்பாக மசூதியின் மக்கள் தொடர்பு அலுவலரான ஹபிபுல்லாவை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது தோல்வியில் தான் முடிவடைந்தது.
இதையும் படிங்க:"சிறையில் அமைச்சருக்கு மசாஜ் செய்தவர் ஒரு கைதி" - அதிர்ச்சித்தகவல்!