காச்ர்கோடு (கேரளா): கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள சிறிய டவுன் பெரியா. சாலை பணிகளை மேற்கொள்ள அவ்வூரில் உள்ள இருந்த பேருந்து நிறுத்தத்தை நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றியதாக கூறப்படுகிறது.
மொட்டை வெயிலில் கால் கடுக்க முதியவர்கள், பெண்கள், மாணவர்கள் பேருந்துக்காக காத்திருக்கும் அவலத்திற்கு தள்ளப்பட்டனர். இதையறிந்த அப்பகுதி இளைஞர்கள் சிலர், தொண்டு நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் சேர்ந்து மொபைல் பேருந்து நிறுத்தத்தை உருவாக்கினர்.