தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பேருந்து உடைப்பு; கைதாகிறார் ராஜ் தாக்கரே! - ராஜ் தாக்கரே

மகாராஷ்டிராவில் பேருந்துகள் உடைக்கப்பட்ட சம்பவத்தில், மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) கட்சியின் நிறுவனத் தலைவர் ராஜ் தாக்கரே கைதாக வாய்ப்புகள் உள்ளன.

ராஜ் தாக்கரே
ராஜ் தாக்கரே

By

Published : Jan 6, 2022, 5:16 PM IST

பீத் (மகாராஷ்டிரா): மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா கட்சித் தலைவர் ராஜ் தாக்கரேவை கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து பார்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் அதிரடி அரசியலுக்கு பெயர் எடுத்தவர் ராஜ் தாக்கரே. இவர், சிவசேனா நிறுவனர் பாலசாகிப் தாக்கரேவின் மறைவிற்கு பின்னர், சிவசேனாவிலிருந்து விலகி மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) என்ற தனிக்கட்சியை தொடங்கினார்.

இவர் தலைமையில் 2008ஆம் ஆண்டு அக்டோபர் 22ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள பார்லியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜ் தாக்கரே கட்சித் தொண்டர்கள் வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபட்டனர். பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் அரசு சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கப்பட்டன.

இது தொடர்பாக பார்லி ஊரக காவல் நிலையத்தில் இபிகோ 143, 427, 336 மற்றும் 109 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு பார்லி விசாரணை நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில் ஆஜராக ராஜ் தாக்கரேவுக்கு பல முறை நோட்டீஸ் அளிக்கப்பட்டு அறிவுறுத்தப்பட்டது.

எனினும் அவர் வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் தவிர்த்துவந்தார். இந்நிலையில், ராஜ் தாக்கரேவை கைது செய்ய ஜாமினில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து பார்லி விசாரணை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதனால் ராஜ் தாக்கரே விரைவில் கைதாகலாம் எனத் தெரிகிறது.

இதையும் படிங்க : 'இதுக்கு எதுக்கு டெண்டுல்கர், அக்ஷய் குமாரே போதும்'- பங்கம் செய்த ராஜ் தாக்கரே!

ABOUT THE AUTHOR

...view details