பெங்களூரு:நித்தியானந்தா மீது 2010ஆம் ஆண்டு தொடரப்பட்ட பாலியல் பலாத்கார வழக்கில், ராம் நகர் மூன்றாம் கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை நேற்று (ஆக. 20) பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில்,. மூன்று சாட்சிகளையும் குறுக்கு விசாரணை செய்யப்பட்டுவிட்டது. இருப்பினும், குற்றஞ்சுமத்தப்பட்ட நித்தியானந்தா கடந்த 3 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மேலும், 2019ஆம் ஆண்டில் இருந்து நீதிமன்றம் அனுப்பிய சம்மன்கள் எதற்கும் அவர் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இதனால், முன்னதாக இந்த வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அவர் இருக்கும் இடம் தெரியாததால் போலீசாரால் அவரை கைது செய்ய முடியவில்லை.
எனவே, தற்போது அவர் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்டை நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. இந்த வாரண்ட் வரும் செப். 23ஆம் தேதிவரை செல்லுபடியாகும். நித்தியானந்தாவின் ஓட்டுநர் லெனின் என்பவர் 2010ஆம் ஆண்டு, நித்யானந்தா மீது பாலியல் பலாத்காரம் வழக்கு ஒன்றை தொடுத்தார்.