தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது - ப.சிதம்பரம் ட்வீட்! - ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது

நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

growth rate
growth rate

By

Published : Jun 1, 2022, 7:10 PM IST

காங்கிரஸ் மூத்தத் தலைவர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "நாட்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிந்து வருகிறது. மத்திய அரசு வாக்குறுதி அளித்த வளர்ச்சிக்கான எந்தவித அறிகுறியும் தென்படவில்லை.

2021-22ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில், ஜிடிபி வளர்ச்சி 20. 1 ஆகவும், இரண்டாம் காலாண்டில் 8. 4 ஆகவும், மூன்றாம் காலாண்டில் 5. 4 ஆகவும், நான்காம் காலாண்டில் 4.1ஆகவும் இருந்துள்ளது.

இந்த புள்ளிவிவரங்கள் படி, ஜிடிபி வளர்ச்சி கணிசமாக குறைந்து, இறுதி காலாண்டில் 4.1 வரை சரிந்துள்ளது. இதில் ஜிடிபி வளர்ச்சி அதிகரிப்பதற்கான எந்தவித அறிகுறியும் இல்லை. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:நேஷனல் ஹெரால்டு வழக்கு: ராகுல், சோனியாவுக்கு அமலாக்கத் துறை சம்மன்

ABOUT THE AUTHOR

...view details