தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் குறித்து பரிசீலனை - மம்தா பானர்ஜி - தேசிய செய்திகள்

தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம், திட்டத்தை அமல்படுத்துங்கள் என மேற்கு வங்க அரசை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது. இதற்கு ‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டம் நடைமுறைபடுத்தப்படுவதற்கான வேலைகள் நடந்து வருவதாக மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

mamata on One Nation One Ration scheme
mamata on One Nation One Ration scheme

By

Published : Jun 15, 2021, 3:00 AM IST

கொல்கத்தா (மேற்கு வங்கம்): 'ஒரே நாடு, ஒரே ரேஷன்' திட்டத்தை நடைமுறைப் படுத்துவதில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என மாநில அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு ஒரே நாடு, ஒரே ரேசன் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி ஒருவர் நாட்டின் எந்த பகுதியில் இருந்தாலும், மற்றொரு பகுதிக்குச் செல்லும்போது ரேசன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம். தமிழ்நாடு உள்பட பெரும்பாலான மாநிலங்கள் இத்திட்டத்தில் இணைந்தன.

மேற்கு வங்காளம், டெல்லி உள்பட மூன்று மாநிலங்கள் மட்டும் இந்தத் திட்டத்தில் இணையவில்லை. கடந்த வாரம் இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் கருத்து ஒன்றை வெளியிட்டது. அப்போது ‘‘தயவு செய்து சாக்குபோக்கு கூற வேண்டாம். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் இணையுங்கள்’’ என மேற்கு வங்காளத்தை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்த நிலையில் ‘‘ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. இத்திட்டம் பரிசீலனையில் உள்ளது’’ என்று மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details