தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மேற்கு வங்காளத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி?

மேற்கு வங்கத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்ற பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களின் கோரிக்கையை உள்துறை அமைச்சர் அமித் ஷா நிராகரித்தார்.

Amit Shah
Amit Shah

By

Published : May 7, 2022, 12:17 PM IST

கொல்கத்தா: உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு நாள்கள் பயணமாக மேற்கு வங்காளம் சென்றுள்ளார். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை (மே6) பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பாஜக எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் மேற்கு வங்காளத்தில் அரசியல் சாசன சட்டப்பிரிவு 356-ஐ அமல்படுத்தி மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

இதனை நிராகரித்த அமித் ஷா, மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தபோது மம்தா பானர்ஜியும் நிறைய போராட வேண்டியிருந்தது. ஆரம்ப காலத்தில் என்மீதும் பல்வேறு வழக்குகள் போடப்பட்டன” என்றார்.

எனினும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் அரசை அமித் ஷா ஏற்றுக்கொள்ளவில்லை. இது குறித்து அவர், “அன்று சிபிஐ அரசு செய்ததை, மம்தா பானர்ஜி தற்போது செய்கிறார். மாநிலத்தில் நாம்தான் எதிர்க்கட்சி. நாம் மன உறுதியோடு போராட வேண்டும்” என்றார்.

தொடர்ந்து, “மேற்கு வங்காளத்தை போன்று பிகார் மற்றும் கேரளத்திலும் பாஜகவினர் மீது தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இதை எதிர்த்து நாம் போராட வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : புதுச்சேரியில் அமித் ஷா; ஸ்ரீ அரவிந்தர் குறித்து பரபரப்பு பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details