டெல்லி : டெல்லியில் உள்ள மின் தகன மேடை மயானத்தில் 9 வயதான சிறுமி ஒருவர் பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு ஆக.1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என பாஜக எம்பி ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் ஈடிவி பாரத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “கரோனா பெருந்தொற்று பரவலுக்கு மத்தியில் மனிதர்கள் தங்களின் தவறுகளை உணர வேண்டும். ஆனால் சற்றும் உணராமல் பாவங்களை சேர்த்துக் கொண்டே செல்கின்றனர். நான் அந்த இடத்திற்கு சென்றேன்.
டெல்லி தலித் சிறுமி வன்புணர்வு கொலை- நியாயமான விசாரணை தேவை- பாஜக! இதுபோன்ற செயல்கள் இந்த நாட்டில் ஏன் நடக்கின்றன என்று எனக்கு தெரியவில்லை. இது அரசியல் விஷயமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்றார்.
டெல்லியில் தலித் சிறுமி பாலியல் வதைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பத்தில் மத சடங்கு செய்பவர் மற்றும் மூன்று பேரை காவலர்கள் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க :பாலியல் வன்கொடுமையின் மையப்புள்ளி டெல்லி- காங்கிரஸ் கடும் தாக்கு!