குஜராத்:இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையின் போது போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது என குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி தெரிவித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய அவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குஜராத்தில் போக்குவரத்து போலீசார் அக்டோபர் 27 வரை விதிமீறல் செய்பவர்களிடம் இருந்து அபராதம் எதுவும் வசூலிக்க மாட்டார்கள் என்று கூறினார். முதல்வர் பூபேந்திர படேலின் வழிகாட்டுதலின்படி, தீபாவளியின் போது மக்களுக்கு நிவாரணம் வழங்க மாநில உள்துறை முடிவு எடுத்துள்ளதாக சங்கவி கூறினார்.