தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பாய் ஃபிரண்டு இல்லையா, அப்போ மாணவிகள் கல்லூரிக்கு வராதீங்க' - போலி கடிதத்தால் குஷியான சிங்கிள் பாய்ஸ்! - ஆக்ரா

ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி பெயரில் வெளியான போலியான கடிதம் ஒன்று பரபரப்பை கிளப்பியுள்ளது.

viral
viral

By

Published : Jan 27, 2021, 5:48 PM IST

Updated : Jan 27, 2021, 6:02 PM IST

"பிப்ரவரி 14ஆம் தேதிக்குள் உங்களுக்கு பாய் ஃபிரண்டு கிடைக்கலான கல்லூரிக்குள் நுழைய மாணவிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒவ்வொரு மாணவிக்கும் கட்டாயம் ஒரு பாய் ஃபிரண்டாவது இருக்கணும். மாணவிகளின் பாதுகாப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்லூரிக்குள் நுழையும்போது அண்மையில் பாய் ஃபிரண்டுடன் எடுத்த புகைப்படத்தை காட்ட வேண்டும்" இப்படி அச்சிடப்பட்ட கடிதம் ஒன்று ஆக்ராவில் உள்ள சென் ஜோன்ஸ் கல்லூரி பெயரில் வைரலானது.

இந்த கடிதத்தை படித்த அக்கல்லூரியைச் சேர்ந்த சிங்கிள் பாய்ஸ் செம குஷியில் திளைத்திருந்த நேரத்தில்தான், அந்தக் கடிதம் போலியானது என்று தற்போது தெரியவந்துள்ளது.

கடிதம் லைரலானது குறித்த கல்லூரி முதல்வர் எஸ்பி.சிங் கூறுகையில், "தங்களின் கல்லூரி இதுமாதிரி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. எங்களின் கல்லூரியின் பெயரில் போலியான கடிதத்தை யாரோ பகிர்ந்து உள்ளனர். இந்த வேலையை யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் இந்த கடிதத்தை புறந்தள்ள வேண்டும்” என்றார்.

கல்லூரி பெயரில் வெளியான போலியான கடிதம்

காதலி கிடைக்காத விரக்தியில் இருந்த யாரோ ஒரு மொரட்டு சிங்கிள்தான் இந்த வேலையை பார்த்திருக்காங்கணு கல்லூரியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் சந்தேகிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தயல்பாக் கல்லூரி பெயரிலும் இதேபோன்ற ஒரு போலியான கடிதம் பரவியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தலைகுனிந்திருந்த கேரள அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் தலைநிமிர்ந்த கதை!

Last Updated : Jan 27, 2021, 6:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details