தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்த உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற உறவினர்கள் - ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் நேர்ந்த அவலம்.! - சுகாதார நடவடிக்கை

Odisha horror: ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கிய நபரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வசதி கிடைக்காததால் உறவினர்கள் அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச்சென்ற அவலம் அரங்கேறியுள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 13, 2023, 3:21 PM IST

ஒடிசா:ஒடிசா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை மின்னல் தாக்கிய நிலையில், உறவினர்கள் அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல 108 ஆம்புலன்ஸ் உதவியை நாடியுள்ளனர். இரண்டரை மணி நேரம் காத்திருந்தும் ஆம்புலன்ஸ் வராததால் பாதிக்கப்பட்டவரை உறவினர்கள் தங்கள் இருசக்கர வாகனத்தில் சுமார் 10 கிலோ மீட்டர் கொண்டு சென்ற அவலம் அரங்கேறி இருக்கிறது.

இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ள நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதார நடவடிக்கைக்கு எதிராக மக்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தள ஆட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.

தேசிய அளவில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பேசி வரும் நிலையில்தான் அப்பாவி மக்கள் அடிப்படை சுகாதாரத் தேவை கூட கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர். சந்திரயான் 3 மற்றும் ஆதித்யா எல் 1 விண்கலங்களை விண்ணில் அனுப்பி அதன் மூலம் பெருமை கொண்ட அரசுக்கும், இந்த சமூகத்திற்கும் சவால் விடும் வகையில் ஒடிசா மாநிலத்தின் அங்குல் மாவட்டத்தில் அப்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அங்குல் மாவட்டத்தில் உள்ளது பாலசிங்க கிராமம். இங்கு விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு மக்களின் பிரதான தொழிலாக உள்ளது. படிப்பறிவில் பின்தங்கிய ஏழை மக்கள் அதிகம் வாழும் பகுதி அது. இந்நிலையில் அந்த கிராமத்தைச் சேர்ந்த 60 வயதுடைய துவாரி குரு என்பவர் அவருக்குச் சொந்தமான வயல்வெளியில் தனது கால்நடைகளை மேய்த்துக்கொண்டு இருந்துள்ளார்.

அப்போது திடீரென அவர் மீது மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே துவாரி குரு பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து அவரது உடலை அங்கிருந்து மீட்ட உறவினர்கள், தங்கள் மன ஆறுதலுக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனை அடுத்து அவர்கள் 108 ஆம்புலன்ஸ் உதவியையும் நாடியுள்ளனர்.

ஆனால் சுமார் இரண்டரை மணி நேரமாக இறந்த உடலைக் கையில் வைத்துக்கொண்டு காத்திருந்த உறவினர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனை அடுத்து துவாரி குருவின் உடலை இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில் மத்திய, மாநில அரசுகளின் சுகாதார அலட்சியத்தை விமர்சித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க:INDIA blocs coordination committee: 2024 நாடாளுமன்ற தேர்தலில் யார் யாருக்கு எத்தனை இடங்கள் - INDIA கூட்டணி முக்கிய முடிவு!

ABOUT THE AUTHOR

...view details