இந்தியாவில் பல குற்ற வழக்குகளில் தேடப்பட்டுவரும் சாமியார் நித்யானந்தா தலைமறைவானார். மேலும் அவர் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா எனப் பெயர் சூட்டி அங்கு வசித்துவருவதாக அவரே கூறியுள்ளார்.
இப்படி தலைமறைவாக இருக்கும் நித்யானந்தா அவ்வப்போது சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டு பக்தர்களுடன் உரையாடிவருகிறார்.
தற்போது நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு நித்யானந்தா நாள்தோறும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு அவதாரமாக நேரலையில் காட்சியளித்துவருகிறார். சமீபத்தில் திருமலை ஏழுமலையான் வேடத்தில் நித்யானந்தா காட்சித் தந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நித்தியானந்தா ஒரு பொருட்டே அல்ல - மதுரையில் புதிய ஆதீனம் பேட்டி