தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

Reliance AGM: ரிலையன்ஸ் வாரியத்தில் இருந்து நீதா அம்பானி விலகல்: வாரிசுகளுக்கு வாய்ப்பு! - Nita Ambani steps down from jio

Reliance: ரிலையன்ஸ் வாரியத்தின் இயக்குநர் பதிவியில் இருந்து நீதா அம்பானி விலகியுள்ளார். மேலும், வாரிசுகளை நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

Etv Bharat நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமனம்
Etv Bharat நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமனம்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 28, 2023, 5:02 PM IST

நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமனம்

மும்பை:ரிலையன்ஸ் நிறுவனத்தின் 46வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. மேலும், அதற்கான அறிவிப்புகளை முகேஷ் அம்பானி அறிவித்தார். அப்போது, ரிலையன்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து நீதா அம்பானி பதவி விலகுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலையன்ஸ் அறக்கட்டளையின் தலைவராக நீடிப்பார் என தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரது வாரிசுகள் ஈஷா அம்பானி, ஆனந்த அம்பானி, ஆகாஷ் அம்பானி ஆகியோரை நிறுவனத்தின் நிர்வாகமற்ற இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு, ஆகாஷ் அம்பானியை இந்தியாவின் மிகப்பெரிய மொபைல் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட்-ன் (Reliance Jio Infocomm Limited) தலைவராக நியமிக்கப்பட்டார்.

இருப்பினும், ஜியோ நிறுவனத்தின் தலைவராக அம்பானி தொடர்கிறார். ஆகாஷின் சகோதரியான இஷா ரிலையன்ஸின் சில்லறை விற்பனைப் பிரிவையும், இளைய சகோதரன் ஆனந்த் புதிய ஆற்றல் வணிகப் பிரிவையும் கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:சென்னையில் 326 கிராம் தங்கம் மூலம் பூசிய நகைகளை அடமானம் வைத்து மோசடி.. 3 பேர் கைது!

ABOUT THE AUTHOR

...view details