டெல்லி: கடந்த 2017ஆம் ஆண்டு சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி வரி கொண்டு வரப்பட்டது. இவ்வாறு கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரியால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம், பொருளாதார இலக்குகள், வர்த்தகம், பணமதிப்பு, தனிநபர் நிதி நிலைமை மற்றும் வணிக கோட்பாடுகள் ஆகியவை குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, இதுவரை 51 ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டங்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்த நிலையில், இன்று (அக்.7) 52வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெறும் இந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மத்திய நிதி அமைச்சக உயர் அலுவலர்கள், மாநில நிதி அமைச்சர்கள் உள்பட மாநில நிதி உயர் அதிகாரிகளும் பங்கேற்று உள்ளனர்.