கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 12 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 8 பேரின் பரிசோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை (செப்.7) வெளியாகின.
அமைச்சர் வீணா ஜார்ஸ் பேட்டி
கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த கேரளத்தின் சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்றால் இறந்த 12 வயது குழந்தையுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட எட்டு பேரின் சோதனை முடிவுகள் செவ்வாய்க்கிழமை எதிர்மறையாக வந்துள்ளன.
இந்தச் செய்தி மிகப்பெரிய நிவாரணம் அளிக்கிறது. குழந்தையை கவனித்துக்கொண்ட பெற்றோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் மாதிரிகளும் எதிர்மறையாக வந்துள்ளன.
நிம்மதி
குழந்தையுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களின் முடிவுகள் எதிர்மறையாக வந்திருப்பது நிம்மதியான தருணம். மேலும் மாதிரிகள் செவ்வாய்க்கிழமை மீண்டும் பரிசோதிக்கப்படும்.
இது தவிர குழந்தையுடன் தொடர்பில் இருந்த 251 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 129 பேர் சுகாதாரப் பணியாளர்கள். நிபா வைரஸ் பரவுவதைத் தடுக்க அரசு சுகாதார விழிப்புணர்வை அதிகரித்துள்ளது.
வயநாடு, கண்ணூர்..
கோழிக்கோடு, கண்ணூர், மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் சுகாதாரத் துறைகள் உஷார் படுத்தப்பட்டுள்ளன. உள்ளூர் அலுவலர்கள் வைரஸின் தோற்றத்தைக் கண்டறியும் முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ளனர், இது கொடிய வைரஸ் மேலும் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் அதன் அச்சுறுத்தலைக் கணக்கிடவும் முக்கியமானதாகும்.
இறந்த குழந்தைக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி காய்ச்சல் ஏற்பட்டது மற்றும் முதலில் அவள் அவரது பகுதியில் உள்ள கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர், ஓமசேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
இருப்பினும், அவர் மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஞாயிற்றுக்கிழமை (செப்.5) அதிகாலை இறந்தார்.
நிபா வைரஸ் பாதிப்பு
புனேவின் தேசிய வைராலஜி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட சிறுமியின் மாதிரிகள், அவள் வைரஸால் பாதிக்கப்பட்டிருந்ததை உறுதிப்படுத்தின.
தென்னிந்தியாவின் முதல் நிபா வைரஸ் பரவல் மே 2018 இல் கேரளத்தில் இதே மாவட்டத்தில் பதிவானது. இதுவரை கேரளத்தில் நிபா வைரஸிற்கு 17 இறப்புகள் பதிவாகியுள்ளன. 18 பேர் வைரஸ் தொற்றுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதையும் படிங்க : நிபா அறிகுறி வந்தா... உடனே கோமாதான் - அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்