ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் பர்வாடாவிலிருந்து உஜ்ஜைனி நோக்கி நேற்று(பிப்.20) திருமண விருந்திற்காக 9 பேர் காரில் புறப்பட்டனர். அப்போது கார் கோட்டாவின் பூண்டி சாலையில் சென்றுகொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த சம்பா ஆற்றுக்குள் கவிழ்ந்து மூழ்கியது. தகவலறிந்த காவலர்கள், தீயணைப்புத்துறையினருடன் சம்பவயிடத்திற்கு விரைந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.
ஆற்றில் ஒன்பது பேருடன் மூழ்கிய கார்... மணமகனுக்கு நேர்ந்த சோகம்... - ராஜஸ்தான் கார் விபத்து
ராஜஸ்தான் மாநிலம் சம்பா ஆற்றுக்குள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் மணமகன் உள்பட ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
வெகு நேரத்திற்கு பிறகு ஏழு பேரின் உடல் காரிலும், இருவரின் உடல் ஆற்றிலும் மீட்கப்பட்டன. இதுகுறித்து காவல்துறை தரப்பில், இந்த விபத்தில் மணமகன் உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகாலையில் விபத்து நடந்ததால், தகவல்கிடைக்க தாமதமாகிவிட்டது. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்துவருகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:நெய்வேலியில் அதிவேகமாக வந்த கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு