லக்னோ(உத்தரப்பிரதேசம்): லக்னோவில் நேற்று (செப்-15) இரவில் பெய்த கனமழையால் ராணுவக் குடியிருப்பில் உள்ள கட்டுமானப் பணிகளின் எல்லைச்சுவர் இடிந்து விழுந்து ஒன்பது தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார். இடிபாடுகளில் சிக்கிய ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய லக்னோ காவல்துறை இணை ஆணையர் பியூஷ் மோர்டியா கூறுகையில், ‘தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ வளாகத்திற்கு வெளியே குடிசைகளில் தங்கியிருந்த தொழிலாளர்கள் சிலர் கனமழை காரணமாக ராணுவ வளாகத்தின் எல்லை சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிகாலை 3 மணிக்கு இறந்த 9 பேரின் உடல்கள் மீட்புக்குழு உதவியின் மூலம் மீட்கப்பட்டன. மேலும் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டார். காயமடைந்தவர்கள் டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ எனக் கூறினார்.