தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜஸ்தானில் இரவு நேர ஊரடங்கு அமல்!

ராஜஸ்தான்: மீண்டும் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக அஜ்மீர், பில்வாரா ஆகிய ஆறு பகுதியில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு
இரவு நேர ஊரடங்கு

By

Published : Mar 21, 2021, 10:50 PM IST

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தி வந்தாலும், சில மாநிலங்களில் மீண்டும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் குறிப்பிட்ட சில மாநிலங்களில் மீண்டும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் பரவி வரும் கரோனா தொற்று காரணமாக அஜ்மீர், பில்வாரா, ஜோத்பூர், கோட்டா, உதய்பூர், சாக்வாரா, குஷல்கர், ஜெய்ப்பூர் ஆகியப் பகுதிகளில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை போடப்பட்டுள்ள இந்த ஊரடங்கு திங்கட்கிழமை முதல் அமலுக்கு வரவுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

தொடர்ந்து மார்ச் 25ஆம் தேதி முதல் மாநிலத்திற்குள் வருபவர்கள் ஆர்டி-பி.சி.ஆர் நெகட்டிவ் சான்றிதழ் கொண்டு வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மறு உத்தரவு வரும் வரை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்குள் இருக்கும் வகுப்பினருக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details