டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெய்பிரகாஷ் மருத்துவமனையில் குரங்கம்மை அறிகுறிகளுடன் நேற்று (ஆக. 1) 2 பேர் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் மாதிரிகள் பரிசோதனைக்காக புனேவில் உள்ள தேசிய வைராலஜி மையத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தகவலில், இருவரும் ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதற்கு முன்னதாகவே டெல்லியில் வசிக்கும் 35 வயது நைஜீரிய நபர் குரங்கம்மை அறிகுறிகளுடன் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகளும் பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று (ஆக 1) மாலை குரங்கம்மை தொற்று உறுதி செய்யப்பட்டது. இவருடன் சேர்ந்து நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6ஆக உயர்ந்துள்ளது.