மகாராஷ்டிரா மாநிலம் மும்பை அல்டாமவுண்ட் சாலையில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் வீட்டருகே, வெடிபொருள்களுடன் நின்ற வாகனம் குறித்துக் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அந்த வாகனத்திலிருந்து ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்செய்யப்பட்டுள்ளன. மேலும், அந்த வாகனத்திலிருந்து மிரட்டல் கடிதம் ஒன்றையும் காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். தானேவில், அந்தக் காரின் உரிமையாளர் மன்சுக் ஹிரெனை, இறந்த நிலையில் காவல் துறையினர் கண்டெடுத்துள்ளனர்.