தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

அமிர்தசரஸ் சிறையில் என்ஐஏ சோதனை

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தடுப்பதற்காக பஞ்சாப்பில் உள்ள சிறைகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர் சோதனையில் ஈடுபட்டனர்.

பஞ்சாப் சிறையில் என்ஐஏ சோதனை
பஞ்சாப் சிறையில் என்ஐஏ சோதனை

By

Published : Dec 25, 2022, 4:02 PM IST

அமிர்தசரஸ் (பஞ்சாப்): பஞ்சாப்பில் உள்ள சிறைகளில் முதன்முறையாக தேசிய புலனாய்வு முகமை குழுவினர் சோதனையில் ஈடுபட்டனர். பஞ்சாப் தலைநகர் அமிர்தசரஸ் மத்திய சிறையில் என்ஐஏ குழுவினர் நள்ளிரவு சோதனை நடத்தினர்.

எல்லை தாண்டிய போதைப்பொருள் பயங்கரவாதத்தைத் தடுக்க வட இந்தியாவில் 14 இடங்களில் நேற்று என்ஐஏ சோதனை நடத்தியது தெரியவந்துள்ளது. ஜம்மு - காஷ்மீர் தவிர, அமிர்தசரஸ், ஃபெரோஸ்பூர், தர்ன் தரண் ஆகிய இடங்களிலும் என்ஐஏ குழுக்கள் சோதனை நடத்தியுள்ளன.

சோதனை நடவடிக்கையின்போது மத்திய சிறையில் இருந்து இரண்டு மொபைல் போன்களை என்ஐஏ குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் அமைப்புகள் சிறையில் இருந்து செயல்படுகின்றன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் என்ஐஏ-விடம் உள்ளன.

அமிர்தசரஸ் மத்திய சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் செல்போன்கள் மற்றும் தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: "இருநாட்டு உறவுகளை மேம்படுத்த இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற தயார்" - சீனா!

ABOUT THE AUTHOR

...view details