தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தீவிர தேடுதல் வேட்டையில் என்ஐஏ - ஒருவர் கைது! - என் ஐ ஏ

மாவோயிஸ்டுகளுக்கு உதவும் குழுக்களைக் கண்டறிய தேசிய புலனாய்வு முகமை அலுவலர்கள் தெலுங்கு மாநிலங்களில் தீவிர சோதனை நடத்திவருகின்றனர். இதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

NIA IS CONDUCTING SEARCHES IN ANDRA PRADESH
NIA IS CONDUCTING SEARCHES IN ANDRA PRADESH

By

Published : Apr 1, 2021, 6:58 AM IST

Updated : Apr 1, 2021, 7:10 AM IST

ஹைதராபாத் (தெலங்கானா): மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கு உதவும் குழுக்களைக் கண்டறிய தேசிய புலனாய்வு முகமை தீவிர சோதனை மேற்கொண்டுவருகிறது.

ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகமையின் அலுவலர்கள் தீவிர சோதனை செய்துவருகின்றனர். 2017ஆம் மாவோயிஸ்ட் இயக்கங்களுக்கு நகரத்திலிருந்து உதவிகள் செய்ததாக ஒருவர் கைதுசெய்யப்பட்டார். அந்த வழக்கை ஆந்திர மாநில காவல் துறை விசாரித்துவந்தது.

பாகிஸ்தான் பயங்கரவாதிக்கு 10 ஆண்டு சிறை!

இச்சூழலில், தற்போது வழக்கு தேசிய புலனாய்வு முகமை வசம் மாற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதன் அலுவலர்கள் நடத்திய அதிரடி சோதனையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹைதரபாத்தில் ஏழு இடங்களிலும், விசாகப்பட்டினம், குண்டூர், மெடாக், ரங்காரெட்டி ஆகிய இடங்களிலும் தொடர்ந்து சோதனை நடத்தப்பட்டுவருகிறது.

Last Updated : Apr 1, 2021, 7:10 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details