ஹைதராபாத்: பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாகவும், மத ரீதியாக வன்முறையை தூண்ட பயிற்சி அளித்ததாகவும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தினர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று (செப் 18) சோதனை நடத்தினர்.
ஆந்திரா, தெலங்கானாவில் என்ஐஏ சோதனை
பிஎப்ஐ வழக்கு தொடர்பாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
NIA
அந்த வகையில் ஆந்திராவில் கர்னூல், நெல்லூர், கடப்பா, குண்டூர் ஆகிய இடங்களிலும், தெலங்கானாவில் நிசாமாபாத் மாவட்டத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் ஷாதுல்லா என்பவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. சுமார் 24 என்ஐஏ குழுக்கள் சோதனையில் ஈடுபட்டன.
இதையும் படிங்க: கணவருக்கு 10 நிமிடம் "கரண்ட் ஷாக்" கொடுத்துவிட்டு காதலனுக்கு போன் செய்த மனைவி