தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 22, 2021, 6:46 AM IST

ETV Bharat / bharat

இன்றைய நிகழ்வுகளின் செய்தித் தொகுப்பு #ETV Bharat News Today

ஆகஸ்ட் 22ஆம் தேதியின் நிகழ்வுகள், செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

NEWS TODAY
நிகழ்வுகள்

382ஆவது மெட்ராஸ் தினம்

தமிழ்நாட்டின் தலைநகரமும், நாட்டின் நான்காவது பெரிய நகரமுமான சென்னை, இந்தாண்டு தனது 382ஆவது பிறந்த நாளை கொண்டாடவுள்ளது. சுதந்திர இந்தியாவுக்கு முன்பு மதராசபட்டினம் என்று அழைக்கப்பட்ட இந்த இடம், தற்போது அனைத்து நாட்டவரும் அறியும் சென்னை மாநகரமாக இருக்கிறது.

மெட்ராஸ் தினம்

ரக்‌ஷா பந்தன் வாழ்த்துகள்

ரக்‌ஷா பந்தன் என்பது சகோதரத்துவத்தை போற்றும் வகையில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இன்று (ஆக. 22) கொண்டாடப்பட உள்ள இப்பண்டிகை, உடன் பிறந்த மற்றும் உடன் பிறவா சகோதர சகோதரிகளிடையே பாச பிணைப்பை குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

ரக்‌ஷா பந்தன்

16 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலூர், சென்னை, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, தென்காசி, திண்டுக்கல், மதுரை, நாகை, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கனமழை

இன்று பெட்ரோல், டீசல் விலை குறைவு

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ 99.47 ஆகவும், டீசல் லிட்டர் ரூ 93.84 ஆகவும் விற்பனையானது. இந்நிலையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகள் குறைந்து ரூ 99.32 ஆகவும், டீசல் லிட்டருக்கு 18 காசுகள் குறைந்து ரூ 93.66 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

பெட்ரோல், டீசல்

ABOUT THE AUTHOR

...view details