தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'புல்லட் பண்டி'க்கு குத்தாட்டம் போட்ட மணமகள்... ஓவர்நைட்டில் ட்ரெண்டிங்! - Bullet Bandi song

திருமண நிகழ்ச்சியில் மணமகனை வரவேற்க குத்தாட்டம் போட்ட மணமகளின் காணொலி சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.

புல்லட் பாண்டி
Bullet Bandi

By

Published : Aug 19, 2021, 1:36 PM IST

ஹைதராபாத்: திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் பாட்டத்திற்கு நிச்சயம் குறை இருக்காது. மணமக்களை வரவேற்று நடனம் ஆடிக்கொண்டிருந்த காலம் தற்போது மலையேறிவிட்டது. அவர்களே களத்தில் இறங்கி குத்தாட்டம் போட்டு இணையத்தைக் கலக்கும் காலம் இது.

அந்த வகையில், தெலங்கானாவில் மணமகனை வரவேற்று மணப்பெண் நடனமாடிய காணொலி ஒன்று சமூக வலைதளத்தில் ஹிட் அடித்துள்ளது.

தெலங்கானா, மஞ்சிரியாள் மாவட்டத்தின் ஜன்னாரத்தைச் சேர்ந்தவர் ராமு. வனத்துறை அலுவலரான இவரின் மகளுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

'புல்லட் பண்டி'க்கு குத்தாட்டம் போட்ட மணமகள்

அப்போது, மாப்பிள்ளையை வரவேற்க களமிறங்கிய மணமகள், மெகா ஹிட் அடித்த 'புல்லட் பண்டி' பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இதனையடுத்து, ஓவர்நைட்டில் அந்தப் புதுமணத் தம்பதிகள் வைரலாகியுள்ளனர்.

முன்னதாக இந்த வீடியோவை பகிர்ந்த ’புல்லட் பண்டி’ பாடலை பாடிய மோகனா போகராஜு, மணமகளின் குத்தாட்டத்தால் தனது பாடல் மேலும் பிரபலமடைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:முதல்ல ட்விட்டர், இப்போ இன்ஸ்டா... சோகத்தில் கங்கனா!

ABOUT THE AUTHOR

...view details