தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

முகநூல் காதல்... திருமணம் முடிந்த பிறகு மாப்பிள்ளைக்கு காத்திருந்த அதிர்ச்சி... - திருமணம் முடிந்த பிறகு மணப்பெண் ஒரு ஆண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஒடிசாவில் நடந்த காதல் திருமணத்தில், மணப்பெண் ஒரு ஆண் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Newly wed bride
Newly wed bride

By

Published : May 28, 2022, 8:32 PM IST

Updated : May 28, 2022, 9:16 PM IST

ஒடிசா: மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அலோக் குமார் என்ற இளைஞர், ஒடிசா மாநிலம் பத்ரக் மாவட்டத்தைச் சேர்ந்த மேக்னா மண்டல் என்ற பெண்ணுடன் மூகநூல் மூலம் நட்பாகியுள்ளார். சில வாரங்களாக இருவரும் தொடர்ந்து குறுஞ்செய்தி மூலம் பேசி பழகியுள்ளனர். பின்னர் காதலிக்க தொடங்கி திருமணம் செய்யவும் முடிவு எடுத்துள்ளனர்.

இதையடுத்து, ஒடிசாவில் உள்ள சண்டிகோல் பகுதிக்கு சென்ற அலோக் குமார், மேக்னாவை திருமணம் செய்துள்ளார். பின்னர், பசுதேவ்பூரில் உள்ள அலோக் குமாரின் உறவினர் வீட்டிற்கு, இருவரும் சென்றுள்ளனர். அங்கு மணமக்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்நிகழ்ச்சியில், அலோக்கின் உறவினர்கள் சிலர், மேக்னா பெண் போலில்லை என்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுதொடர்பாக அலோக் குமாரிடம் கூறியதையடுத்து, மேக்னாவை விசாரித்ததில் அவர் ஒரு ஆண் என்பதை அறிந்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது உண்மையான பெயர் மேகானந்தா என்பதும் தெரியவந்தது. மேகானந்தா ஏமாற்றியதால் ஆத்திரமடைந்த அலோக் குமாரின் உறவினர்கள், அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். அவரது நீளமான கூந்தலை வெட்டி, அவருக்கு ஆண்களின் உடையை அணிவித்து, போலிசில் ஒப்படைத்தனர். பிறகு மேகானந்தாவை மீட்ட போலீசார், அவரை அவரது குடும்பத்திடம் சேர்த்தனர்.

இதையும் படிங்க: முதுகலை தோட்டக்கலைதுறையில் 16 தங்கப்பதக்கம் பெற்று மாணவி சாதனை!

Last Updated : May 28, 2022, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details