குஜராத் மாநிலம் வதோதராவில் 15 நாள்களுக்கு முன்பு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்குத் தீவிர வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அதனால் பெற்றோர், குழந்தைகளைத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
அங்கு குழந்தைகளுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன. அதில், இரண்டு குழந்தைகளுக்கும் கரோனா பாதிப்பிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், "குழந்தைகள் வயிற்றுப் போக்கு, நீரிழப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அவர்களின் பெற்றோர் முன்னதாக கரோனா சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். தற்போது குழந்தைகளின் உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது. விரைவில் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்படுவர்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:பாலிவுட் நடிகை அலியா பட்டிற்கு கரோனா உறுதி!