நியூயார்க்:காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாக அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் கனடாவிற்கு தெரிவித்ததாக மேற்கத்திய நட்பு நாடுகளின் அதிகாரிகள் தெரிவித்து உள்ளது என தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஜீன் 18ஆம் தேதி அன்று பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு சீக்கிய கோவிலுக்கு வெளியே காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் இந்த கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாகக் கனடாவிற்குத் தகவல் தெரிவித்து உதவியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு அதிகாரிகள் தகவல் தெரிவித்ததாகக் கூறப்படுகின்றன.
காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்தியாவிற்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தார். இந்தியா மீதான குற்றச்சாட்டு பைவ் ஐஸ் உளவுத்துறையால் பகிரப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கனடாவுக்கான அமெரிக்கத் தூதர் டேவிட் கோஹனின் அறிக்கையின் படி இது ஒரே கருத்தாக உள்ளன. பைவ் ஐஸ் உளவுத்துறையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன இந்த அமைப்பு 1946ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
இதையும் படிங்க:ஹர்தீப் சிங் கொலை! "இந்தியா - கனடா இணைந்து செயல்பட வேண்டும்" - அமெரிக்கா கோரிக்கை!