டெல்லி: புதிய எல்லை பாதுகாப்புப் படை அலுவலர்களை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதிய இந்திய-திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் நியமனம் - ஐபிஎஸ் அலுவலர்கள் நியமனம்
இந்தியா - திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராக சஞ்சய் அரோரா ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளாதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஐபிஎஸ் அலுவலர்கள் நியமனம்
அதில், "இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அலுவலர் சஞ்சய் அரோரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய - திபெத் எல்லை பாதுகாப்புப்படை தலைவர் எஸ்.எஸ்.தேஸ்வால் ஆகஸ்ட் 31ஆம் தேதி பணி ஓய்வு பெறும் நிலையில், தற்போது சஞ்சய் அரோரா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல, எல்லை பாதுகாப்புப்படை தலைவராக ஐபிஎஸ் அலுவலர் பங்கஜ் குமார் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்" என்று மத்திய உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.