நாட்டில் கோவிட் -19 பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (முதுகலை) ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் வியாழக்கிழமை (ஏப்.15) அறிவித்தார்.
கரோனா பரவல் காரணமாக நீட் தேர்வு ஒத்திவைப்பு!
கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.
#NEETPG2021 POSTPONED NEET NEET PG Exam NEET PG Exam 2021 Covid-19 NEET PG Exam 2021 postponed நீட் தேர்வு ஒத்திவைப்பு
முன்னதாக நீட் (மருத்துவ முதுகலை) நுழைவுத் தேர்வு ஏப்ரல் 18 அன்று நடைபெற திட்டமிடப்பட்டது. இந்நிலையில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த முடிவு இளம் மருத்துவ மாணவர்களின் நல்வாழ்வை மனதில் வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ள தேர்வுகள் மற்றொரு தேதியில் நடத்தப்படும். அடுத்த தேதி பின்னர் முடிவு செய்யப்படும். இந்தத் தகவலை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.