டெல்லி:மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் போன்ற பட்டப்படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் ஜூலை 17 அன்று இந்தியா முழுவதும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 543 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
நீட் தேர்வை தமிழ், ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் எழுதலாம். இந்த தேர்விற்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்விற்கான ஹால் டிக்கெட்டை நாளை முதல் www.nta.ac.in, www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.