புடாபெஸ்ட் :ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதலில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்று சாதனை படைத்தார். இறுதிப் போட்டியில் 88 புள்ளி 17 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் 40 ஆண்டுகால உலக தடகள வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை நீரஜ் சோப்ரா நிகழ்த்தினர்.
நீரஜ் சோப்ராவுக்கு கடும் சவாலாக இருந்த பாகிஸ்தான் வீரர் ஹர்சத் நதீம் 87 புள்ளி 82 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இறுதி போட்டியில் கலந்து கொண்ட மற்ற இந்திய வீரர்களான கிஷோர் 84 புள்ளி 77 மீட்டரும், டி.பி. மனு 84 புள்ளி 14 மீட்டரும் வீசி முறையே 5 மற்றும் 6வது இடங்களை பிடித்தனர்.
ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. கடைசி நாளில் ஈட்டி எறிதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா கலந்து கொண்டார்.
அவரைத் தொடர்ந்து மற்ற இரண்டு இந்திய வீரர்கள் டி.பி. மனு மற்றும் கிஷோர் ஆகியோர் களம் இறங்கினர். முதல் சுற்றில் 88 புள்ளி 77 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா 2024ஆம் ஆண்டு பிரான்ஸ் தலைநகரில் நடைபெற உள்ள பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டியில் விளையாடிய அவர் தனது முதல் வாய்ப்பில் ஃபவுல் செய்தார்.