தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செபியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறது என்டிடிவி நிறுவனம்! - ராதிகா ராய்

பிரணாய் ராய், ராதிகா ராய் இருவரையும் இரண்டு ஆண்டுகளுக்கு பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட செபி எனப்படும் பங்கு சந்தை ஒழுங்கு முறை ஆணையம் தடைவிதித்துள்ளது. செபியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

NDTV to appeal
NDTV to appeal

By

Published : Nov 29, 2020, 3:54 AM IST

டெல்லி: என்.டி.டி.வி., நிறுவனர்களான பிரணாய் ராய், ராதிகா ராய் ஆகியோருக்கு எதிராக பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான, செபியின் உத்தரவு, தவறான உண்மை மதிப்பிடுகளை அடிப்படையாகக் கொண்டது என்றும், உடனடியாக அதற்கு எதிராக மேல்முறையீடு செய்யும் என்றும் என்டிடிவி தெரிவித்துள்ளது.

பிரானாய் ராய் மற்றும் ராதிகா ராய் இருவரும், பங்கு பரிவர்த்தனைச் சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக எழுந்த புகாரை விசாரித்த செபி, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர்கள் இருவரும் பங்கு பரிவர்த்தனையில் ஈடுபட தடை விதித்துள்ளது. இருவரும் 12 ஆண்டுகளாக உள் வர்த்தகத்தில் ஈடுபட்டு சட்டவிரோதமாக ஈட்டிய ரூ.1697 கோடிக்கும் அதிமான லாபத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதுகுறித்து என்.டி.டி.வியின் ஒரு அறிக்கையில், உள் வர்த்தகம் குறித்த செபி உத்தரவு தவறான உண்மைகளின் மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது. மேல்முறையீட்டில் அது பொய் என நிருபிக்கப்படும் என்று கூறியுள்ளது. தொடர்ந்து உடனடியாக மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

என்.டி.டி.வி நிறுவனர்களான ராதிகா ராய் மற்றும் பிரணாய் ராய் ஆகியோரின் சார்பில் டி.எம்.டி வக்கீல்களின் மூத்த பங்குதாரர் ஃபெரேஷ்டே சேத்னா தலைமையிலான வழக்கறிஞர்கள் இந்த அறிக்கையை வெளியிட்டனர்.

கண்காணிப்புக் குழு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் வரையிலான காலத்திற்கு நிறுவனத்தின் பங்குகளில் உள் வர்த்தகம் செய்வதற்கு ஏழு தனி நபர்களையும் நிறுவனங்களையும் தடைசெய்துள்ளது. அவர்களில் சிலர் வெளியிடப்படாத விலை உணர்திறன் தகவல் (யுபிஎஸ்ஐ) வசம் இருந்தபோது பங்குகளில் வர்த்தகம் செய்வதன் மூலம் பெற்ற சட்டவிரோத ஆதாயங்களை திருப்பி செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

செபியின் உத்தரவில், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் சி.எஃப்.ஓ உள்ளிட்ட மூன்று முன்னாள் மூத்த என்.டி.டி.வி நிர்வாகிகள் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:கரோனா தடுப்பூசி வீடுகளைத் தேடி வரும் - டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details