மும்பை:இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஒன்றிய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந்தநிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் ட்விட்டரில், "எனக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நலமாக உள்ளேன். எனது மருத்துவரின் ஆலோசனைகளைப் பின்பற்றி வருகிறேன்.