மும்பை : அரபிக் கடலில் சொகுசுக் கப்பலில் நடந்த விருந்தில் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் அவருடன் சேர்த்து எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆர்யன் கான் பிணை கோரி மும்பை நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி, ஆர்யன் கானுக்கு பிணை வழங்க மறுப்பு தெரிவித்து, ஆர்யன் கான் உள்பட 8 பேருக்கும் 14 நாள்கள் நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கில் ஆர்யன் கான் உள்ளிட்ட 7 பேருக்கும் பிணை வழங்க போதைப் பொருள் தடுப்பு பிரிவு சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் இந்த வழக்கில் ஆர்யன் கான் முதன்மை குற்றவாளியாக கருதப்படுகிறார்.
தந்தை ஷாருக்கானுடன், ஆர்யன் கான் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கு பாலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. ஏற்கனவே போதைப் பொருள் பயன்படுத்திய வழக்கில் கர்நாடகா மற்றும் மும்பையை சேர்ந்த நடிகர்- நடிகைகள் சிலர் கைதுசெய்யப்பட்டு விசாரணை வளையத்துக்குள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ஆர்யன் கான் கைது: ஷாருக் கானுக்கு ஆறுதல் தெரிவித்த சல்மான் கான்