மும்பை: போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலர்கள் இன்று (அக். 6) செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கூறிய அவர், "மகாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான நவாப் மாலிக், போதைப் பொருள் தடுப்பு பிரிவு (NCB) மீது வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளும் அடிப்படை ஆதாரமற்றவை.
என்சிபி அலுவலர்கள் சட்டரீதியாகவும், வெளிப்படத்தன்மையுடனும் பாரபட்சமற்ற வகையில்தான் அனைத்து நடவடிக்கையையும் மேற்கொண்டனர். மேலும், கிரண் கோஸாவி, மனீஷ் பானுசாலி ஆகியோர் அளித்த தகவலின்பேரில் தான் இந்த சோதனை நடத்தப்பட்டது என உறுதிசெய்தனர்.