தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஜார்கண்டில் ரயில் தண்டவாளம் தகர்ப்பு: நக்சல்கள் அட்டூழியம் - ஜார்கண்டில் நக்சல்கள் தண்டவாளத்தை வெடிக்கச் செய்தன

ஜார்கண்டில் நேற்றிரவு சோனுவா-சக்ரதர்பூருக்கு இடையிலான ரயில் பாதையை நக்சல்கள் தகர்த்து அட்டூழிய செயலில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Naxals
Naxals

By

Published : Apr 26, 2021, 12:40 PM IST

ராஞ்சி: ஜார்கண்டின் சைபாசாவில் நேற்று அதிகாலை சோனுவா-சக்ரதர்பூர் ரயில் பாதையை நக்சல்கள் தகர்த்தனர். இதையடுத்து இப்பாதையில் மறுசீரமைப்புப் பணி மேற்கொள்ளப்பட்டது.

உழவர்களின் எதிர்ப்பைக் கருத்தில்கொண்டு ஒரு பாரத் பந்த் இருக்கும் என்று கூறி நக்சல்கள் பதாகைகளை அப்பகுதியில் வைத்ததாகக் கூறப்படுகிறது.

டோக்லோ காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சக்ரதர்பூர் அனுமண்டலில் நக்சல்கள் ரயில் தண்டவாளத்தைத் தகர்த்தனர். அதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

ஹவுரா-அகமதாபாத் விரைவு ரயில், டாடா-அலெப்பி விரைவு ரயில், அகமதாபாத் விரைவு ரயில் போன்ற பல பயணிகளின் ரயில்களும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து, மறு சீரமைப்புப் பணிகள் நடைபெற்றன.

ABOUT THE AUTHOR

...view details