தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'போர்க் கைதிகளை சுதந்திர போராளிகளாக மாற்றக்கூடிய ஆளுமை நேதாஜி' - வெங்கையா நாயுடு புகழாரம்!

ஹைதராபாத்: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

ஹைதராபாத்
ஹைதராபாத்

By

Published : Jan 24, 2021, 11:14 AM IST

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த நாள் விழா நேற்று(ஜன-23) பல்வேறு இடங்களில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அந்த வகையில், ஹைதராபாத்தில் உள்ள எம்சிஆர்-எச்ஆர்டி நிறுவனத்தில் நேதாஜி உருவப்படத்திற்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அவரது ட்வீட்டில், ஒரு குறிக்கோளுக்காக ஒருவர் இறக்கக்கூடும். ஆனால், அந்த எண்ணம் அவரின் மரணத்திற்கு பிறகு ஆயிரம் பேரின் எண்ணத்தில் உதிக்கும். அத்தகைய சுதந்திர போராட்ட வீரர், தொலைநோக்குத் தலைவர் தான் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ். 'போர்க் கைதிகளை' 'சுதந்திர போராளிகளாக' மாற்றக்கூடிய ஆளுமை கொண்டவர் நேதாஜி. ஜனவரி 23, 1897 அன்று ஒடிஸாவில் பிறந்த அவர், சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்.

ஆசாத் ஹிந்த் ஃபாஜை நிறுவுவதற்கும் பெயர் பெற்றவர். ஆகஸ்ட் 18, 1945 தேதின்று தைபேயில் நடந்த விமான விபத்தில் போஸ் இறந்தது பெரும் சர்ச்சையாகவே இருந்து வந்தது. இச்சம்பவத்தில் அவர் விபத்தில் தான் இறந்துவிட்டார் என்பதை மத்திய அரசு 2017இல் ஆர்டிஐ மூலம் உறுதிப்படுத்தியது.

ABOUT THE AUTHOR

...view details