ஜம்மு காஷ்மீரில் உள்ள பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் ராணுவ வீரர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கு கடும் மோதல் ஏற்பட்டது. இதில் ஐந்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்தனர். இந்நிலையில், ராணுவத் தளபதி முகுந்த் நரவனே பூஞ்ச் பகுதிக்கு சென்று அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்.
மேலும், மற்ற எல்லைப் பகுதிகளையும் நரவனே பார்வையிட்டார். இம்மாதத்தில் ஜம்மு காஷ்மீரில் பயங்கராவத தாக்குதல் அதிகரித்துள்ளது. கடந்த இரு வாரத்தில் மட்டும் பொது மக்கள் 11 பேர் பயங்கரவாத தாக்குதலால் உயிரிழந்துள்ளனர்.