இதுதொடர்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி வீடியோ பதிவு வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 4 நாட்களாக நடைபெற்று வரும் சண்டையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் கடும் தாக்குதலுக்கு உள்ளாசி இருப்பதகா குறிப்பிடுள்ளார். உக்ரைனில் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் மருத்துவம் மற்றும் பல்கலைக்கழகங்களில் படித்து வருவதாகவும், இந்த போர் நமது மாணவர்களை கடுமையாக பாதித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
பதுங்கு குழிகளில் மாணவர்கள்
உக்ரைனின் பல்வேறு இடங்களில் உயிருக்கு பயந்து இந்திய மாணவர்கள் பதுங்கு குழிகள் மற்றும் மெட்ரோ ரயில் நிலைய அடித்தளத்தில் பாதுகாப்புக்காக தங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவர்கள் உணவு இன்றி இன்னல்களை சந்தித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தங்களது பிள்ளைகள் பாதுகாப்பாக வர வேண்டும் என மாநில முதலமைச்சர்களுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறினார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
உக்ரைன் ரஷ்யா இடையே போர் ஏற்படும் என்று அறிந்ததும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியர்கள் வெளியேற்றுவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தியிருக்க வேண்டும் என்றும், ஆனால் மத்திய அரசு அதை செய்ய தவறி விட்டதாகவும் நாராயணசாம் குற்றம்சாட்டினார்.